தூர பயணத்திற்கான தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டது 

தூர பயணத்திற்கான தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டது 

தூர பயணத்திற்கான தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டது 

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2022 | 8:22 pm

Colombo (News 1st) தூர பயணத்திற்கான பஸ் சேவை இன்று (31) மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

25% பஸ் சேவையே இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் தூர பிரதேசங்களுக்கான சேவை அதிகளவில் இடம்பெறவில்லை எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

சில மார்க்கங்களில் சாதாரணமாக 80 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக இருந்தால், 13 பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

டீசல் பிரச்சினைக்கு மத்தியில் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டமையினால் பயணிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அதிகளவிலான வேன்கள் சேவையில் ஈடுபடவில்லை.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

திட்டமிட்டவாறு இன்றைய தினம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டது.

எனினும், டீசல் தட்டுப்பாடு காரணமாக 30 வீதமான கொள்கலன் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்