தீர்வை வரி செலுத்தாது கொண்டு வரப்பட்ட 1 கிலோ 430 கிராம் தங்கம் கைப்பற்றல் 

தீர்வை வரி செலுத்தாது கொண்டு வரப்பட்ட 1 கிலோ 430 கிராம் தங்கம் கைப்பற்றல் 

தீர்வை வரி செலுத்தாது கொண்டு வரப்பட்ட 1 கிலோ 430 கிராம் தங்கம் கைப்பற்றல் 

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2022 | 4:49 pm

Colombo (News 1st) தீர்வை வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்ஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கச்சங்கிலி மற்றும் pendent ஆகியவற்றை சூட்சுமமாக மறைத்து வைத்து சந்தேகநபர் கொண்டுவந்துள்ளார்.

விமான நிலைய பொலிஸாரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்