கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2022 | 1:20 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் பெண்ணொருவர் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சவுக்கடி பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே கூரான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடித்துவந்த நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்