பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2022 | 4:40 pm

Colombo (News 1st) பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கிய ஆதரவை MQM கட்சி விலக்கிக்கொண்டது.

இதனையடுத்து, அக்கட்சியின் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது நாளை (31) விவாதம் நடைபெறவுள்ளது. 3 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான் கான் அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் MQM கட்சி அறிவித்துள்ளது.

இதனால் இம்ரான் கானின் அரசு நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது.

ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான் கானுக்கு 164 ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.

Government

PTI — 155
PML-Q — 4
GDA — 3
AML — 1
BAP — 1
Total: 164

Opposition

PML-N — 84
PPP — 56
MMA —14
BAP — 4
BNP-M — 4
Independent — 4
ANP — 1
JWP — 1
JI — 1
MQM-P — 7
PML-Q — 1

Total: 177


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்