20 இலட்சம் வீட்டுத்தோட்டங்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்

by Staff Writer 29-03-2022 | 7:32 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் "நமது வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிப்போம்" எனும் தொனிப்பொருளில் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது. 20 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - திருவையாறு மேற்கில் விவசாயியொருவரின் தோட்டக்காணியில் இன்று ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது கரைச்சி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார். வவுனியா - ஒயார்சின்னக்குளம் பிரதேசத்திலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு - தும்பாலை பகுதியிலும் இந்த வீட்டுத்தோட்டம் செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. போராதீவுபற்று - வெல்லாவௌி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டார் மன்னாரிலும் வீட்டுத்தோட்ட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.