ஷாங்காயில் மக்கள் வீட்டை விட்டு வௌியேற தடை

சீனாவில் வேகமாக பரவும் Omicron; ஷாங்காயில் மக்கள் வீட்டை விட்டு வௌியேற தடை

by Bella Dalima 29-03-2022 | 6:17 PM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள புடோங் மாவட்டத்தில் முன்னணி நிதி நிறுவனங்கள், ஷாங்காய் பங்குச்சந்தை உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் தாங்கள் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள நடைபாதையில் நடக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 31 மாகாணங்களில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றுக்குள்ளாகியுள்ளனர். BA.2 Omicron பிறழ்வினாலேயே அதிகளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்தாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Dynamic Zero-COVID Strategy எனும் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளதாகவும் இதன் மூலம் வைரஸ் பாதுகாப்பு மற்றும் சமூகங்களுக்கு இடையிலான தொற்றுப்பரவல் இல்லாது செய்யப்படும் எனவும் சீன ஜனாதிபதி Xi Jinping தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிக வேகத்தில் பரவி வருகின்றது. பொருளாதார விரிவுகாண் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து COVID-ஐ கட்டுப்படுத்துவதற்கான விடயதானங்களை முன்னெடுக்குமாறு பொருளியல் நிபுணர்களிடம் சீன ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.