இந்தியாவுடன் 6 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

இந்தியாவுடன் 6 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 29-03-2022 | 8:08 PM
Colombo (News 1st) BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கை வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸை சந்தித்த போது இந்தியா - இலங்கைக்கு இடையில் மேலும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வௌிவிவகார அமைச்சில் இந்த உடன்படிக்கைகள் நேற்று (28) கைச்சாத்திடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், டிஜிட்டல் தொடர்பு திட்டத்தை செயற்படுத்துதல், சமுத்திர மீட்பு மத்திய நிலையத்தை நிறுவுதல், யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியன தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் கணினி ஆய்வகங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்கும், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்