மைத்திரிபாலவிற்கு வீடு வழங்கும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு

மைத்திரிபாலவிற்கு வீடு வழங்கும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு

மைத்திரிபாலவிற்கு வீடு வழங்கும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2022 | 8:26 pm

Colombo (News 1st) மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் வசித்த கொழும்பு – மஹகமசேகர மாவத்தையிலுள்ள வீட்டை, ஓய்வுபெற்றதன் பின்னரும் அவருக்கே வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (29) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய செயற்படுவதை தடுத்து, அதிகாரிகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) முதல் எதிர்வரும் நான்கு வாரங்களின் பின்னர் அமுலாகும் வகையில் இரண்டு தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம், அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்