by Staff Writer 28-03-2022 | 6:46 PM
Colombo (News 1st) மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று(28) சந்தித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய ஜூலி சங், நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கு இது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.