பண்டிகை கால பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல் 

பண்டிகை கால பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல் 

பண்டிகை கால பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2022 | 3:12 pm

Colombo (News 1st) பண்டிகை காலப்பகுதியில் வௌியிடங்களுக்கு செல்லும் போது அல்லது சுற்றுலாக்களில் ஈடுபடும் போது முகப்புத்தகம்(Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நிழற்படங்களை பதிவேற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சுற்றுலாக்களின் போது எடுக்கப்படும் நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதனூடாக திருடர்களுக்கு நீங்களே உதவி புரியும் நபர்களாக மாறிவிடுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் , சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் தங்காபரணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்