நாளையும்(28) மின்வெட்டு அமுல் - PUCSL

நாளையும்(28) மின்வெட்டு அமுல் - PUCSL

by Staff Writer 27-03-2022 | 6:42 PM
Colombo (News 1st) நாளைய தினமும்(28) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மனி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.