by Staff Writer 26-03-2022 | 8:15 PM
Colombo (News 1st) Raigam Tele'es விருது வழங்கும் விழா கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது
வருடத்தின் சிறந்த செய்தி ஔிபரப்பிற்கான ரைகம் விருதை இம்முறை நியூஸ்ஃபெஸ்ட் தன்வசப்படுத்தியது.
இதனைத் தவிர, நியூஸ்ஃபெஸ்ட் , சக்தி TV மற்றும் சிரச TV-க்கு மேலும் பல விருதுகளும் கிடைத்தன.
சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான விருதை நியூஸ்ஃபெஸ்டின் ரியாஸ் ஹாரிஸ் வெற்றிகொண்டார்.
சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளர் விருது நியூஸ்ஃபெஸ்டின் ஜயமால் ரத்நாயக்க வசமானது.
சிறந்த சிங்கள மொழி செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ்ஃபெஸ்டின் ரந்திக்க சப்புஆராச்சி வென்றார்.
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியாக நியூஸ்ஃபெஸ்டின் மாவத்த நிகழ்ச்சி விருது வென்றது.
2021 ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளர் விருதை நியூஸ்ஃபெஸ்டின் தரூஷ நதீர வென்றார்.
2021 இன் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருதை நியூஸ்ஃபெஸ்டின் ஷார்லன் பெனடிக்ட் சுவீகரித்தார்.
சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை நியூஸ்ஃபெஸ்டின் 'நிதஹச' நிகழ்ச்சிக்காக ரசிக்க தர்மராஜா வென்றார்.
2020 சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது சக்தி TV-இன் களஞ்சியம் நிகழ்ச்சிக்காக ராஜ் பிரஷாந்த் ஶ்ரீவேல்ராஜா வசமானது.
2021 ஆம் ஆண்டின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை சக்தி TV-இன் கேள்விகளால் ஒரு வேள்வி நிகழ்ச்சிக்காக எஸ். ராகேஷ் சர்மா வெற்றிகொண்டார்.