by Staff Writer 26-03-2022 | 5:20 PM
Colombo (News 1st) சோமாவதி வனப்பகுதியின் அக்போபுர - திவுல்கஸ்வெவ பகுதியில் மரம் வெட்டச்சென்ற 100-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் வருகை தந்த 7 டிராக்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காடழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை (27) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.