உலக சந்தையில் தங்கத்தின் விலை 3% வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை 3% வீழ்ச்சி

by Staff Writer 26-03-2022 | 5:31 PM
Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1952.60 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னரான விலையுடன் ஒப்பிடுகையில், 3% வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரித்தானிய Brent சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120.65 டொலராக அமைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் பீப்பாய் ஒன்றின் விலை 113 .90 டொலராக உள்ளது.