by Staff Writer 26-03-2022 | 7:18 AM
Colombo (News 1st) வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்று P முதல் W வரையிலான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.
A முதல் L வரையான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அதே வலயத்தில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளைய தினம், P முதல் W வரையிலான வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும், A முதல் L வரையான வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.