by Staff Writer 26-03-2022 | 7:59 PM
Colombo (News 1st) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார்.
நாட்டில் இடம்பெறவுள்ள BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் வருகை தரவுள்ளார்.
இதன்போது, BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அதிகாரிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சீனாவின் வௌியுறவுத்துறை அமைச்சர் Wang Yi-இன் அவசர இந்திய விஜயம் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.