அமைச்சர்களுக்கான விமான வசதிகளை மட்டுப்படுத்த விமானப்படை தீர்மானம் 

அமைச்சர்களுக்கான விமான வசதிகளை மட்டுப்படுத்த விமானப்படை தீர்மானம் 

அமைச்சர்களுக்கான விமான வசதிகளை மட்டுப்படுத்த விமானப்படை தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2022 | 3:18 pm

Colombo (News 1st) எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய தேவைக்காக, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, வான்வழி கண்காணிப்பு கடமைகள் மற்றும் விமானி பயிற்சி நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள எண்ணெய் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படுவதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்