by Bella Dalima 25-03-2022 | 3:55 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் பரதநாட்டியம், மேற்கத்தேய, கர்நாடக மற்றும் மேற்கிந்திய இசை ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L..M.D. தர்மசேன குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயன்முறை பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்திகளுக்கான அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், 011 2 78 42 08 அல்லது 1911 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.