பெட்ரோல் விலையை  49 ரூபாவால் அதிகரித்தது லங்கா IOC

பெட்ரோல் விலையை 49 ரூபாவால் அதிகரித்தது லங்கா IOC

by Bella Dalima 25-03-2022 | 10:37 PM
Colombo (News 1st) இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 49 ரூபாவால் லங்கா IOC  அதிகரித்துள்ளது. புதிய விலைகளுக்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 303 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 332 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா IOC நிறுவனம் கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலையை 55 ரூபா முதல் 95 ரூபா வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.