by Staff Writer 25-03-2022 | 8:23 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர். ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு பிரேஸிலின் Order of Rio Branco விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரேஸிலுடன் பூகோள உறவுகளை பலப்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அவரது அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த விருதை வழங்கினார்.
அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தற்போதைய தலைவர் சஷி ராஜமகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் சிரேஷ்ட வங்கித்துறை அதிகாரியும் பிரபல வர்த்தகருமான ஜயந்த பெரேராவிற்கும் இந்த விருது வழங்கப்பட்டது.