கஜிமா தோட்டத்தில் பரவிய தீயால் 20 வீடுகள் சேதம்

மட்டக்குளி - கஜிமா தோட்டத்தில் பரவிய தீயால் 20 வீடுகள் சேதம் 

by Bella Dalima 25-03-2022 | 3:36 PM
Colombo (News 1st) கொழும்பு -15, மட்டக்குளி, பேர்கியூசன் வீதி, கஜிமா தோட்டத்தில் பரவிய தீயால் 20 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. 40 உத்தியோகத்தர்களை பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. 02 தீயணைப்பு வாகனங்களும் 04 தண்ணீர் பௌசர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளில் பரவிய தீயில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. நேற்றிரவு பரவிய தீ இன்று அதிகாலை சுமார் 02 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வீடுகளில் வசித்த 85 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்