ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம் 

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம் 

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2022 | 4:46 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாகிரக போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சத்தியாகிரக போராட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் அமைதியான முறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி, இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்