by Staff Writer 23-03-2022 | 3:36 PM
Colombo (News 1st) ரேடியோ ஒன்றை அடகு வைத்தமை தொடர்பில் ஏற்பட்ட தகராறு வலுப்பெற்றமையால், கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டியவை சேர்ந்த 51 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அடகு வைக்கப்பட்டிருந்த ரேடியோவை மீளப்பெற சென்ற நபர், நேற்று பகல் 02 மணியளவில் அங்கிருந்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது, காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
கொழும்பு - புதுக்கடை இலக்கம் -4 நீதவான் சம்பவ இடத்திற்கு இன்று முற்பகல் சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.