by Staff Writer 23-03-2022 | 3:27 PM
Colombo (News 1st) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானம் சிறந்ததென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland)தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மிக நெருக்கடியான நிலையில், தமது நாடு இலங்கையுடன் இருப்பதாக விக்டோரியா நூலண்ட் கூறினார்.
இலங்கைக்கான தனது விஜயத்தில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.