by Staff Writer 23-03-2022 | 5:13 PM
Colombo (News 1st) இந்தியாவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ள 4000 தொன் மிதக்கும் தடாகத்திற்கான (Floating Dock) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் (Goa Shipyard Ltd) நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மிதக்கும் தடாகமானது, 30 மாதங்களுக்குள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது.
இதனை தவிர 06 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை கடற்படை தலைமையகத்திலும் , ஏனைய 8 இடங்களிலும் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க இந்தியா தயாராகியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நேற்று முன் தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.