தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2022 | 1:04 pm

Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 இற்கு இடையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு 100 இற்கும் குறைவாகவே காணப்படல் வேண்டும்.

தெற்காசிய நாடுகளில் அதிகரித்துள்ள வளிமாசடைவினால் இலங்கையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுவாசக் கோளாறுடையவர்களை அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்