ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று(23)

ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று(23)

ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று(23)

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2022 | 8:50 am

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் நடைபெறவுள்ளது.

எனினும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்