by Staff Writer 23-03-2022 | 11:20 AM
Colombo (News 1st) இஸ்ரேலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீர்ஷெபா(Beersheba) நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வௌிப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மூவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தாக்குதல்தாரியால் வாகனத்தால் மோதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதல்தாரி பஸ் சாரதியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
IS குழுவினருக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த தாக்குதல்தாரி இதற்கு முன்னர் சிறை வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய உட்துறை பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.