ரோஹிங்யா மீதான வன்முறை 'இனப்படுகொலை' - அமெரிக்கா

ரோஹிங்யா மக்கள் மீதான வன்முறை 'இனப்படுகொலை' - அமெரிக்கா

by Staff Writer 22-03-2022 | 11:07 AM
Colombo (News 1st) மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை 'இனப்படுகொலை' என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரமாக கொண்டு இந்த அறிவிப்பு வௌியிடப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் Antony Blinken தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகரிலுள்ள அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரை நிகழ்த்திய அமெரிக்க இராஜாங்க செயலாளர், ரோஹிங்கியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பரவலாக திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்டவை என குறிப்பிட்டார். சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மற்றும் மனித உரிமை அமைப்பு போன்ற நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் அமெரிக்காவின் சுயாதீன ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் மதிப்பாய்வின் அடிப்படையில் மியன்மார் படுகொலைகள் உறுதியானது என அமெரிக்கா கூறியுள்ளது.