மோசடி வழக்கில் சிக்கிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் 

மோசடி வழக்கில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் குற்றவாளி என அறிவிப்பு

by Bella Dalima 22-03-2022 | 4:21 PM
Colombo (News 1st) மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டுள்ளார். தற்போது சிறையிலுள்ள நவால்னி, மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றங்களுக்காக மேலும் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தடை செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளில் 4.7 மில்லியன் டொலரை களவாடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நஞ்சூட்டப்பட்டதையடுத்து ஜெர்மனிக்கு கொண்டு சென்று உயிர் பிழைத்து கடந்த ஆண்டு நாடு திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.