by Staff Writer 22-03-2022 | 11:18 AM
Colombo (News 1st) ஆறு மில்லியன் டொலர் இந்திய நிதி உதவியின் கீழ், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான உபகரணங்களை விநியோகிக்கும் இந்தியாவின் பாரத் இலத்திரனியல் நிறுனத்துடனும் மற்றுமொரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், அவற்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.