எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்கும் இராணுவத்தினர்

எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

by Bella Dalima 22-03-2022 | 3:24 PM
Colombo (News 1st) எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.