சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து உதய கம்மன்பில இராஜினாமா

சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து உதய கம்மன்பில இராஜினாமா

சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து உதய கம்மன்பில இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2022 | 3:15 pm

 Colombo (News 1st) சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தீர்மானித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சு பதவியிலிருந்து தம்மை விலக்கியமையால், நிறைவேற்று பதவியான ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயற்படுவது பொருத்தமற்றது என இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய உதய கம்மன்பில கூறியுள்ளார்.

எரிசக்தி அமைச்சராக செயற்பட்ட உதய கம்மன்பிலவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் பதவி நீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்