எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

by Staff Writer 21-03-2022 | 3:00 PM
Colombo (News 1st) மீரிகம நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 76 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் எரிபொருள் வரிசையில் காத்திருந்து மயங்கி வீழ்ந்து உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.