by Staff Writer 21-03-2022 | 2:57 PM
Colombo (News 1st) நிட்டம்புவ - ஹொரகொல்ல பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(20) ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி, எரிபொருளை பெற்று பயணித்துக் கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.