மீண்டும் பால் மா விலையை அதிகரிக்க திட்டம்

மீண்டும் பால் மா விலையை அதிகரிக்க திட்டம்

by Staff Writer 19-03-2022 | 6:12 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால் மா பக்கெட்டின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 400 கிராம் பால் மாவின் விலையை 550 ரூபா முதல் 600 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். எனினும், இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பால் மாவிற்கான விலை அதிகரிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.