மார்ச்சில் மாத்திரம் 172Bn ரூபா அச்சிடப்பட்டுள்ளது

மார்ச் மாதத்தில் மாத்திரம் 172.34 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

by Staff Writer 19-03-2022 | 8:12 PM
Colombo (News 1st) பரீட்சை வினாப்பத்திரங்கள், மின் பட்டியல்கள் உள்ளிட்டவைகளை அச்சிடுவதற்கு காகிதம் இல்லை என கூறும் நிலையில், பணம் அச்சிடப்பட்டமை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் அச்சிட இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானம் பொருட்களின் விலை உயர்விற்கான காரணம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாவை நெகிழ்வுப் போக்கில் விட தீர்மானித்ததன் பின்னர், மத்திய வங்கி 170 பில்லியனுக்கும் அதிக பணத்தை அச்சிட்டுள்ளது. மத்திய வங்கி 55.95 பில்லியன் ரூபாவை நேற்று (18) அச்சிட்டுள்ளதுடன், இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 172.34 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 7 ஆம் திகதியின் பின்னர் மத்திய வங்கி 170 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. தற்போது அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபா 25.2% வீழ்ச்சியடைந்துள்ளது.