பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு 

பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு 

by Staff Writer 19-03-2022 | 8:40 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால் மா பெக்கட்டின் புதிய விலை 790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.