by Staff Writer 19-03-2022 | 7:25 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமகா விகாரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று புனித பூமியாக பிரகடனப்படுத்தினார்.
யாழ்ப்பாணம் - நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ , அமரபுர மகா நிக்காயவின் தலைவர், அஸ்ஸஜி தேரர், நயினாதீவு நவதகல பதுமகித்தி திஸ்ஸ அவர்களை சந்தித்தார்.
பின்னர் புனித பூமி பணிப்பாளர் ருச்சிர விதான, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார்.