உக்ரைனின் ஆயுதக்கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா

உக்ரைனின் ஆயுதக்கிடங்கை இலக்கு வைத்து ரஷ்யா Kinzhal Hypersonic ஏவுகணை தாக்குதல்

by Bella Dalima 19-03-2022 | 7:55 PM
Colombo (News 1st) ரஷ்யா உக்ரைனில் முதன்முறையாக Kinzhal Hypersonic ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத சேமிப்புக் கிடங்கை இலக்கு வைத்து Kinzhal Hypersonic ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, "Hypersonic aero-ballistic ஏவுகணைகள் கொண்ட kinzhal aviation ஏவுகணை அமைப்பு, Ivano-Frankivsk பகுதியில் உள்ள Deliatyn கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய நிலத்தடி கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் kinzhal ஏவுகணையும் ஒன்றாகும். இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும். வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடியது.