காகித தட்டுப்பாடு: மின் பட்டியல்கள் அச்சிடுவதில் சிக்கல் 

காகித தட்டுப்பாடு: மின் பட்டியல்கள் அச்சிடுவதில் சிக்கல் 

காகித தட்டுப்பாடு: மின் பட்டியல்கள் அச்சிடுவதில் சிக்கல் 

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2022 | 4:18 pm

Colombo (News 1st) காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர், ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.

மின் பட்டியல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலவினால், இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேடி அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் வினவியபோது, விரும்பிய பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் மின் பட்டியல்களை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்