மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நாமல் ராஜபக்ஸ நாடு திரும்பினார்

by Staff Writer 18-03-2022 | 10:22 PM
Colombo (News 1st) மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (18) நாடு திரும்பினார் மாலைத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டிற்கான மாலைத்தீவு விளையாட்டுத்துறை விருது வழங்கும் நிகழ்விலும் அமைச்சர்​ நேற்று கலந்துகொண்டிருந்தார். சர்வதேச நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதனிடையே, மாலைத்தீவில் நீர் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் ஒன்றிலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார்.