எரிவாயு உற்பத்தியை மீள ஆரம்பித்துள்ள லிட்ரோ

எரிவாயு உற்பத்தியை மீள ஆரம்பித்துள்ள லிட்ரோ நிறுவனம் 

by Staff Writer 18-03-2022 | 3:50 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. நாட்டை அடைந்துள்ள எரிவாயு கப்பலுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம், முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு கப்பல்களிலிருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்திற்குள் தற்போது நிலவும் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்குமென நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, தமது எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.