மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நாமல் ராஜபக்ஸ நாடு திரும்பினார்

மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நாமல் ராஜபக்ஸ நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2022 | 10:22 pm

Colombo (News 1st) மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (18) நாடு திரும்பினார்

மாலைத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டிற்கான மாலைத்தீவு விளையாட்டுத்துறை விருது வழங்கும் நிகழ்விலும் அமைச்சர்​ நேற்று கலந்துகொண்டிருந்தார்.

சர்வதேச நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதனிடையே, மாலைத்தீவில் நீர் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் ஒன்றிலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்