பதுளை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பதுளை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பதுளை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2022 | 10:35 pm

Colombo (News 1st) கடந்த வருடம் பதுளையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று (18) பசறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பதுளை – பசறை, 13 ஆம் கட்டை பகுதியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்.

பஸ் விபத்து இடம்பெற்று ஒரு வருடம் நெருங்குகின்ற நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று செயலக அதிகாரியொருவரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்