காகித தட்டுப்பாடு காரணமாக  மேல் மாகாணத்தில் இறுதித் தவணை பரீட்சைகளை நடத்துவதில் தாமதம்

காகித தட்டுப்பாடு காரணமாக  மேல் மாகாணத்தில் இறுதித் தவணை பரீட்சைகளை நடத்துவதில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2022 | 5:48 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்