ஜப்பானில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு

by Staff Writer 17-03-2022 | 9:47 AM
Colombo (News 1st) ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நேற்றிரவு(16) 7.3 மக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 90 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுமார் 2 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். Fukushima கடலுக்கு அடியில் 57 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் பதிவானதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுனாமி ஏற்பட்டதில் பாரியளவில் அணு ஆலை சேதங்கள் ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.