இரு வேறு பிரதேசங்களில் இருவர் கொலை – தங்க நகைகள் கொள்ளை

இரு வேறு பிரதேசங்களில் இருவர் கொலை – தங்க நகைகள் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2022 | 12:15 pm

Colombo (News 1st) சீதுவ மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தங்க நகைகளை கொள்ளையிட வந்த குழுவினால் பெண் மற்றும் ஆணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ – முகலன்கமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த 73 வயதாக பெண்ணொருவர் நேற்று(16) கொலை செய்யப்பட்டுள்ளதுடன், உடைமைகள் மற்றும் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மாலபே – தலாஹேன பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பலொன்று மனைவியை கட்டிவைத்துவிட்டு கணவரை கொலை செய்துள்ளதுடன், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இதன்போது 80 வயது முதியவர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்