காயாங்கேணி அகழ்வாராய்ச்சியில் கலைப்பொருட்கள்

காயாங்கேணி துறைமுக அகழ்வாராய்ச்சியில் கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 16-03-2022 | 1:55 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் உள்ள பழைய காயாங்கேணி துறைமுகமானது கடந்த காலங்களில் உலகின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுடன் வர்த்தக உறவுகளை கொண்டிருந்த மேம்பட்ட வர்த்தக துறைமுகமாக செயற்பட்டதாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த துறைமுகம் கி.பி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து துறைமுகமாக இயங்கிவருவதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார். துறைமுக நகரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் சீன, இந்திய, பாரசீக மற்றும் ரோமானிய மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர, தாய்லாந்து, மியன்மார் உள்ளிட்ட பல தென்கிழக்காசிய நாடுகளின் மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சியில் பல கண்ணாடி பொருட்களின் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.