by Staff Writer 16-03-2022 | 1:04 PM
Colombo (news 1st) காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை ஒரு தடவை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டமூலம், காணாமல் போன நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதிவாளர் நாயகத்தினால் சான்றிதழை பெற்றுக்கொண்ட காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவை ஒரு தடவை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.